தோனியின் திவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டின் நிறத்தை சிஎஸ்கேவின் மஞ்சள் நிறத்தில் மாற்றி பிரபலமடைந்தவர் என்பது பலரும் அறிந்ததே. தன்னுடைய வீட்டிற்கு தோனி வருகை தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்தநிலையில் தனது வீடு முழுவதும் தோனி படத்தை வரைந்து கவனம் ஈர்த்த கோபிகிருஷ்ணன் நேற்று இரவு கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் சிலர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் மன உளைச்சலில் இருந்த கோபிகிருஷ்ணன் இன்று அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . தோனியின் ரசிகர் தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
