6வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பிறகு டோனியிடம் வீரர்கள் ஆட்டோகிராப் வாங்கினர். அப்போது சிஎஸ்கே வீரரான தீபக் சாஹர், கேப்டன் டோனியிடம் சந்தோசமாக சென்று ஆட்டோகிராப் கேட்டார். அதற்கான பேனாவையும் நீட்டினார்.
உடனே டோனி உனக்கு ஆட்டோகிராப் போட முடியாது என்று விலகினார். அப்போது அருகில் இருந்தவரிடம் கேட்ச் பிடிக்க தெரியல இவனுக்கு எப்படி ஆட்டோகிராப் போட முடியும் என தீபக் சஹாரை டோனிகலாய்த்தார்.
முடிவில் தீபக் சாஹர் அணிந்திருந்த சிஎஸ்கே ஜெர்சியில் டோனி ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்றைய போட்டியில் சுப்மன் கில் கேட்சை தீபக் சாஹர் பிடிக்காமல் கோட்டைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் கோப்பை வென்ற சென்னை அணி இன்று பிற்பகல் கோப்பையுடன் சென்னை திரும்பியது. விமான நிலையத்தில் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.