மத்திய சென்னை தொகுதி திமுக எம்.பி. தயாநிதி மாறன். இவர் கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், சென்னை தலைமை செயலகம் சென்று தலைமை செயலாளரை சந்தித்தார். தலைமை செயலாளரை சந்தித்து விட்டு வெளியே வந்த தயாநிதி மாறன், தலைமை செயலாளர் தங்களை தாழ்த்தப்பட்ட மக்களைப்போல நடத்தினார் என பேட்டியில் கூறினார்.
இது குறித்து கோவை போலீசில் புகார் செய்யப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களை புண்படுத்தும் வகையில் தயாநிதி மாறன் பேட்டி இடம் பெற்றதாக அதில் கூறப்பட்டிருந்தது. அதன் பேரில் தயாநிதி மாறன் மீது வன்கொடுமை சட்டத்தில் கோவை போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இப்போது இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே இனி தயாநிதிமாறன் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என தெரிகிறது.