Skip to content
Home » தருமபுர ஆதீனத்திடம் பிளாக்மெயில்…. 4பேரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை

தருமபுர ஆதீனத்திடம் பிளாக்மெயில்…. 4பேரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை

  • by Authour
  மயிலாடுதுறையில் உள்ள    தருமபுரம் ஆதீனத்தின் 27-வது   சந்நிதானமாக உள்ளவர்   மாசிலாமணி   சுவாமிகள், இவர் மீது அவதூறு பரப்பும் வகையான ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாக  கூறி அவரிடம் பணம் கேட்டு கொலைமிரட்டல் விடுப்பதுடன் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோக்களை தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவமானப்படுத்தப் போகிறோம் என்று தொடர்ந்து தங்களை மிரட்டுவதாக  ஆதீனகர்த்தரின் சகோதரர் விருத்தகிரி என்பவர்    7 நபர்கள்மீது  மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்தார்.
  அந்த புகாரில்     மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மற்றும் திருக்கடையூர் விஜயகுமார் ஆகியோர் தூண்டுதலின்பேரில் தஞ்சை வடக்கு பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் ஆடுதுறை வினோத், சீர்காழி பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளர் விக்னேஷ், திருப்பனந்தாளை சேர்ந்த சீனிவாஸ், ஆதீனத்தின் மெய்க்காவலர் செந்தில், ஆதீனத்தின் ஆஸ்தான போட்டோகிராபர் பிரபாகரன், செம்பனார்கோவில் குடியரசு, செய்யாறு வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் ஆகிய 9 பேர் முதற்கட்ட விசாரணையில் குற்றவாளிகள் என தெரியவந்தது, அவர்களில் வினோத், ஸ்ரீநிவாஸ், விக்கி, குடியரசு ஆகியோரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
   இந்த வழக்கில் முக்கிய நபரான  பாஜக மாவட் செயலாளர் அகோரம் தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.  ஆதீனத்தின் மெய்க்காவலர் செந்தில்,   திருக்கடையூர் விஜயகுமார் என்பவர் ஆதீனத்திற்கு ஆதரவாக இருந்தார் என்றும் அவரை இந்தவழக்கிலிருந்து விடுவிக்கவேண்டும் என்று ஆதீனத்தின் சார்பில் புகார் கொடுத்த அவரது
தம்பி விருத்தகிரியே மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குக் கடிதம்  ஒன்றை அனுப்பியிருந்தார்.
இதற்கிடையே செய்யாறு ஜெயச்சந்திரனைப் பற்றி பல்வேறு கதைகள் சொல்லப்பட்ட நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து அவரைதேடிச்சென்றபோது   தாய்லாந்திற்கு   டூர் கிளம்பிவிட்டார்
இதற்கிடையே தற்பொழுது சிறையில் உள்ளவர்கள் மேலும் சில தகவல்களை மறைத்துள்ளதாகவும் அவர்களிடம் தனித்தனியே  விசாரணை மேற்கொண்டால் மேலும் உண்மை வெளிவர வாய்ப்புள்ளது எனக்கருதிய மயிலாடுதுறை போலீசார்அந்த நான்கு நபர்களையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து வீசாரிக்க முடிவுசெய்து 11ம்தேதி மயிலாடுதுறை குற்றவியல் நீதித்துறை நடுவர்நீதிமன்றம் எண்.1ல்  போலீசார் மனு செய்தனர்.  வேண்டுகோளை பரிசீலித்த நீதிபதி கலைவாணி, மயிலாடுதுறைபோலீசார் கேட்கும் 5 நாள்அளிக்க முடியாது என்றும் 2 தினங்கள் மட்டுமே விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார், 13ம்தேதி மாலை 4 நபர்களையும் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும் என்று நிபந்தனையுடன்  போலீஸ் காவலுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
சிறையிலிருந்த   வினோத், விக்னேஷ், ஸ்ரீநிவாஸ் மற்றும் குடியரசு ஆகியோரை  மயிலாடுதுறை போலீசார் நீதிமன்றத்தில்  ஆஜர் படுத்தி  மயிலாடுதுறை காவல்நிலையம்அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *