Skip to content
Home » தருமபுர ஆதீனத்தை மிரட்டியவர்களிடம் இருந்து வீடியோ பறிமுதல்…. பாஜக நிர்வாகி அப்ரூவர் ஆனார்

தருமபுர ஆதீனத்தை மிரட்டியவர்களிடம் இருந்து வீடியோ பறிமுதல்…. பாஜக நிர்வாகி அப்ரூவர் ஆனார்

  • by Senthil

 

மயிலாடுதுறை தருமை ஆதீனத்தின் சகோதரர்  விருத்தகிரி,  மயிலாடுதுறை போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில்  பாஜக மாவட்ட தலைவர் அகாரம் உள்பட பலர் கூட்டு சேர்ந்து ஆதினத்தின் ஆபாச வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாக பிளாக் மெயில் செய்து பணம் பறிக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இதன் பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் உட்பட 9 நபர்கள் சிக்கினர். முதல்கட்டமாக  தஞ்சை பாஜக வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் வினோத், விக்கி, ஸ்ரீநிவாஸ்,குடியரசு ஆகிய 4பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர், அவர்களிடமிம் இதற்கான  ஆதாரம் சிக்கியிருந்தது, மேலும் சில ஆதாரங்கள் தேவைப்பட்டதால் அந்த  4 பேரையும்  2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.  அதில் 3 பேரின் வீடுகளுக்கு அவர்களை அழைத்து சென்று வீட்டில் சோதனை போட்டனர். அங்கிருந்து வீடியோ உள்ளிட்ட சில ஆதாரங்களை  போலீசார் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.  இந்த நி்லையில் பாஜக மாவட்ட  பொதுச்செயலாளர் வினோத்   அப்ரூவராக மாறினார். அவரிடம் போலீசார் ரகசிய வாக்குமூலம் பெற்றனர். இதில் பல திடுக்கிடும் தகவல்களை  அவர் கூறினாராம்.அதன்படி போலீசார் அதி்ரடியில் இறங்கி உள்ளனர்.

நேற்று மாலையுடன் கஸ்டடி முடிந்ததால்  வினோத், விக்கி, ஸ்ரீநிவாஸ்,குடியரசு ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், நீதிபதி கலைவாணி, வரும் 27ம் தேதி வரை  4 நபர்களையும்  சிறையில் அடைக்க உத்தரவிட்டார், அதன்பேரில் 4 நபர்களையும் போலீசார் மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்தனர்.

கைப்பற்றப்பட்ட வீடியோ காட்சியின் உண்மைத்தன்மையை அறிய தொழில்நுட்ப நுண்ணறிவு பகுப்பாய்வுக்கு போலீசார் அனுப்பி உள்ளனர்.  கூறியதாவது: அரசியல் காழ்ப்புணர்ச்சியில் இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் உள்ள வினோத் அப்ரூவராக மாறியுள்ளார். தனியார் கல்வி நிறுவனத்தை ஆதீன நிர்வாகம் விலைக்கு கேட்டுள்ளது. அவர்கள் கொடுக்க மறுத்ததால் குடியரசு இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட 4 பேர் வீடுகளில் சில சிடிக்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. என்ன வீடியோ அதில் யார் யார் என்ன செய்கிறார்கள் என்ற விபரம்இதுவரை தெரிவிக்கவில்லை, விடியோ காட்சியின் உண்மைத்தன்மை அறிய தொழில்நுட்ப நுண்ணறிவு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளநிலையில் இந்த வழக்கு யாரோ சிலரின் தூண்டுதலின்பேரில் போடப்பட்டுள்ளது என்றார்.

பாஜகவின் மாவட்டப் தலைவர் அகோரம் கடந்த மாதம் 28ம்தேதி காலையில் வீட்டிலிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார், இதற்கிடையே மன்ற தேர்தலில் பாஜக சார்பில் நின்று வெற்றிபெறலாம் என்ற எண்ணத்தில் காயை நகர்த்தியபோது சற்றும் எதிர்பாராதவிதமாக ஆடுதுறை வினோத் அப்ரூவராக மாறியதால் பாஜகவினர்  அதிர்ச்சியில்  உள்ளனர்.
இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள செய்யாறு வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் என்பவர் மீது மயிலாடுதுறை போலீசார் சென்ற மாதம் 28ம் தேதி வழக்குப் பதிவுசெய்தனர், ஆனால் அதற்கு இரண்டு தினங்கள் முன்பு 26ம்தேதியே சென்னை விமான நிலையம் வழியாக  அவர் தாய்லாந்து சென்றுவிட்டார், இதை மோப்பம் பிடித்த போலீசார் இந்தியாவில் எந்த ஏர்ப்போர்ட் மற்றும் கடல் மார்க்கமாக வந்தாலும் அவரை மயிலாடுதுறை போலீசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!