இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்துஇன்னிங்சில் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாக் கிராலி 79 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட், அஸ்வின் 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் சதத்தின் மூலம் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 264 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணியை விட இந்தியாமுதல் இன்னிங்சில் 46 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா தரப்பில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் சாதனை பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.. சச்சின் – 100 சதங்கள் 2. விராட் கோலி – 80 சதங்கள் 3. டிராவிட்/ ரோகித் சர்மா – தலா 48 சதங்கள்.
மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் ரோகித்(103), கில்(110) அவுட் ஆனார்கள். அவர்களுக்கு பதில் படிக்கல், சர்ப்ராஸ்கான் ஆகியோர் களம் இறங்கி ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். மதியம் 1.20 மணி அளவில் இந்தியா 3 விக்கெட் இழந்து 315 ரன்கள் எடுத்திருந்தது.