Skip to content

ஒரே போஸ்டரில் குழப்பம் ஏற்படுத்திய தனுஷ்.. இட்லி கடை படத்தின் புதிய அப்டேட்!….

தனுஷின் 50வது படமான ராயன் திரைப்படம் ரூ.150 கோடி வசூலை அள்ளி பாக்ஸ் ஆபிஸில் தனுஷின் அதிகப்படியான வசூல் திரைப்படமாக அமைந்தது. அத்திரைப்படத்தில் அவரே நடித்தது மட்டுமில்லாமல் ராயன் திரைப்படத்தை இயக்குநராகவும் மாறி டைரக்ட் செய்திருந்தார் தனுஷ்.

ராயனுக்கு பிறகு 51வது திரைப்படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற காதல் திரைப்படத்தை இயக்கியிருக்கும் தனுஷ், 52வது திரைப்படமாக இட்லி கடை என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார்.

தனுஷ் இயக்கத்தில் நான்காவது படமாக ‘இட்லி கடை’ என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இது தனுஷின் 52வது திரைப்படமாகும். தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அருண்விஜய் வில்லனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் நித்யா மேனன், ராஜ்கிரண் ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படம் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி திரைக்கு வரும் என சொல்லப்பட்ட நிலையில், அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் அதேநாளில் வருவது உறுதிசெய்யப்பட்டது. இந்த சூழலில் இட்லி கடை படம் தள்ளிப்போகும் என சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக படம் குறிப்பிட்ட பிப்ரவரி 10-ம் தேதி வெளியாகும் என மீண்டும் உறுதிசெய்துள்ளார் தனுஷ்.

error: Content is protected !!