Skip to content

தனுஷ் வழக்கு….நயன்தாரா, விக்னேஷ் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து ‘நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்’ என்ற தலைப்பில்  ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த படம்  கடந்த 18-ம் தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

இதன் டிரெய்லரில், தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தின் சிறு காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவுக்கு எதிராக நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நடிகர் தனுஷ் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு நயன்தாராவுக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இந்த சூழ்நிலையில் நயன்தாராவுக்கு எதிராக, வொண்டர் பார்  நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீதுவழக்கு தொடர அனுமதி வழங்குமாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்து. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு  வந்தது.
இந்த விசாரணையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர தனுஷின் வொண்டர் பார் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இந்த வழக்கில் பதிலளிக்க வேண்டும்  என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!