Skip to content

தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிடியுட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் & ஹாஸ்பிட்டல் திறப்பு…

  • by Authour

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸஸ் அண்ட் ஹாஸ்பிட்டலின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா  நேற்று 14.7.2023 சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் தலைமையேற்று திறந்து வைத்தார். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன் முன்னிலை வகித்து வரவேற்ப்புரை வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் க.கற்பகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

கண்காணிப்பாளர் ஷ்யமளாதேவி மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் வாழ்த்துரை வழங்கினார்கள். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸஸ் அண்ட் ஹாஸ்பிட்டலின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் உயர்திரு அ.சீனிவாசன் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கற்பகம் மகப்பேறு வளாகத்தையும், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன் அவசர சிகிச்சை பிரிவையும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷ்யமளாதேவி பொது மருத்துவ புற நோயாளிகள் பிரிவையும், ரோவர் கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் வரதராஜன் மருந்தகத்தையும், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசுப்ரமணியம் கதிரியக்கவியல் பிரிவையும், திறந்து வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!