காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதை இரு மாநில அரசுகளும் சட்ட ரீதியாக அணுகி வருகிறார்கள். இந்த நிலையில் சமூகவலைதளங்களில் சிலர் தேவையில்லாத தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
இது குறித்து தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது
காவிரி விவகாரத்தில் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
மேலும் பழைய வீடியோக்களை தற்போது நடந்ததை போல சித்தரித்து பரப்பப்பட்டு வருவதாக புகார் வந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் கடந்த சில மணி நேரங்களாக தமிழர்கள் கர்நாடகாவில் தாக்கப்படுவது போன்ற வீடியோக்களையும், பழைய வீடியோக்களை தற்போது நடந்தது போல் சித்தரித்தும் ஒருசிலர் வெளியிட்டு வருவதை அடுத்து டிஜிபி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.