Skip to content
Home » தமிழகம் முழுவதிலும் 45 டிஎஸ்பிக்கள் அதிரடி டிரான்ஸ்பர்.. முழு விபரம்..

தமிழகம் முழுவதிலும் 45 டிஎஸ்பிக்கள் அதிரடி டிரான்ஸ்பர்.. முழு விபரம்..

தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் காத்திருப்போர் பட்டியல் மற்றும் பணியில் இருந்த டிஎஸ்பிக்கள் உள்பட 45 பேரை டிரான்ஸ்பர் செய்து  தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.. இதன் படி .. சென்னை மாநகர காவல்துறையில் அடையாறு உதவி கமிஷனராக பணிபுரிந்து வந்த நெல்சன் தாம்பரம் உதவி கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருள் செல்வன் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி கமிஷனராகவும், திருவள்ளூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாக இருந்த இளங்கோவன் சென்னை மாநகர திருவொற்றியூர் உதவி கமிஷனராகவும், ஆவடி மாநகர காவல்துறையில் பட்டாபிராம் உதவி கமிஷனராக இருந்த சதாசிவம் சென்னை மாநகர வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனராகவும்,

தாம்பரம் மாநகர காவல்துறை சேலையூர் உதவி கமிஷனராக இருந்த முருகேசன் சென்னை மாநகர அடையாறு உதவி கமிஷனராகவும், தாம்பரம் உதவி கமிஷனராக இருந்த சீனிவாசன் சென்னை மாநகர சைதாப்பேட்டை உதவி கமிஷனரகாவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த மோகன் கடலூர் மாவட்டம் திட்டக்குடி டிஎஸ்பியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகர சைதாப்பேட்டை உதவி கமிஷனராக இருந்த கிறிஸ்டின் ஜெயசீலி தாம்பரம் மாநகர சேலையூர் உதவி கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜி.கே.கண்ணன் தமிழக காவல்துறை தொலைத்தொடர்பு பிரிவு டிஎஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுபகுமார் மதுரை நகர திடீர் நகர் உதவி கமிஷனராகவும், திருப்பூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாக இருந்த விஜயகுமார் நாமக்கல் மாவட்ட ராசிபுரம் டிஎஸ்பியாகவும்,

மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி டிஎஸ்பியாக இருந்த அகஸ்டின் ஜோசுவா லானெச் மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பியாகவும், தேனி மாவட்ட பெரியகுளம் டிஎஸ்பியாக இருந்த கீதா தமிழ்நாடு காவல்துறை சைபர் க்ரைம் டிஎஸ்பியாகவும், திருநெல்வேலி டவுன் உதவி கமிஷனராக இருந்த சுப்பையா திண்டுக்கல் மாவட்ட பழனி டிஎஸ்பியாகவும், திருநெல்வேலி நகர குற்ற ஆவண காப்பக உதவி கமிஷனராக இருந்த சரவணன் ஈரோடு மாவட்ட சத்தியமங்கலம் டிஎஸ்பியாவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் டிஎஸ்பியாக இருந்த ஜெயச்சந்திரன் கோவை மாவட்டம் பொள்ளாச்சி டிஎஸ்பியாகவும், முதல்வர் பாதுகாப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த கந்தவேலு சென்னை மாநகர (கிழக்கு) மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி கமிஷனராகவும், நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த சிவக்குமார் திருப்பூர் மாவட்ட அவினாசி டிஎஸ்பியாகவும், கோவை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக இருந்த கிருஷ்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கும், ராமநாதபுரம் சரக காவல் பயிற்சி பிரிவு டிஎஸ்பி சுரேஷ் தமிழ்நாடு போலீஸ் அகாடமி டிஎஸ்பியாகவும், தமிழ்நாடு காவல்துறை சைபர் க்ரைம் டிஎஸ்பியாக இருந்த பிரியா காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்ட பண்ருட்டி 10வது பட்டாலியன் உதவி கமான்டன்டாக இருந்த சபியுல்லா கடலூர் மாவட்ட நெய்வேலி டிஎஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த தீபு திருநெல்வேலி நகர உளவுப்பிரிவு உதவி கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரவிக்குமரன் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் டிஎஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆல்டிரின் தாம்பரம் காவல் ஆணையரக நலப்பிரிவின் உதவி கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கார்த்திக் முதல்வர் பாதுகாப்பு பிரிவு டிஎஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அன்பரசன் தஞ்சை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாகவும்,

காத்திருப்போர் பட்டியலில் இருந்த பூரணி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த தையல்நாயகி கோவை மாவட்ட மின்பகிர்மான கழக விஜிலென்ஸ் பிரிவு டிஎஸ்பியாகவும், தாம்பரம் மாநகர மணிமங்கலம் உதவி கமிஷனராக இருந்த ரவி தாம்பரம் மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட பேரூர் டிஸ்பியாக இருந்த ராஜபாண்டியன் தாம்பரம் மாநகர மணிமங்கலம் உதவி கமிஷனராகவும், தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த மனோகரன் காத்திருப்போர் பட்டியலுக்கும், திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த தனுசியா தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும்,

காத்திருப்போர் பட்டியலில் இருந்த செல்வசேகர் தாம்பரம் காவல் ஆணையரக பயிற்சி பிரிவு மையத்தின் உதவி கமிஷனராகவும், சென்னை மாநகர (கிழக்கு) மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த மகிமைவீரன் ஆவடி மாநகர மணலி உதவி கமிஷனராகவும், மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த கணேசன் திருநெல்வேலி நகர நில அபகரிப்பு பிரிவு உதவி கமிஷனராகவும், திண்டுக்கல் மாவட்ட பழனி டிஎஸ்பியாக இருந்த ஆர்.சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கும், விருதுநகர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக இருந்த சுரேஷ் குமார் கன்னியாகுமரி மாவட்ட நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பியாகவும் பணியிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், கடலூர் மாவட்ட நெய்வேலி டிஎஸ்பியாக இருந்த ராஜ்குமார் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி டிஸ்பியாகவும், கடலூர் மாவட்ட திட்டக்குடி டிஎஸ்பியாக இருந்த காவ்யா சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும், தர்மபுரி மாவட்ட டிஎஸ்பியாக இருந்த செந்தில் குமார் திருப்பூர் நகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராகவும், திருப்பூர் மாவட்ட அவினாசி டிஎஸ்பி பால்ராஜ் காத்திருப்போர் பட்டியலுக்கும்,

புதுக்கோட்டை மாவட்ட ஆலங்குடி டிஎஸ்பியாக இருந்த தீபக் ரஜினி தமிழ்நாடு க்யூ பிரிவு டிஎஸ்பியாகவும், ராமநாதபுரம் மாவட்ட கமுதி டிஎஸ்பியாக இருந்த மணிகண்டன் திருவாரூர் டிஎஸ்பியாகவும், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த வெங்கடகிருஷ்ணன் ராணிப்பேட்டை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு டிஎஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *