தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை தலைவராக கந்தசாமி பணியாற்றி வருகிறார். அவர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
டிஜிபி கந்தசாமி, சிபிஐ அதிகாரியாக இருந்த போது நாட்டின் பல மாநிலங்களில் பரபரப்பாக பேசப்பட்ட வழக்குகளில் விசாரணை நடத்தியவர். 2010-ல் சொராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கில் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவை கைது செய்தவர் சிபிஐ டீமின் தலைவர் டிஜிபி கந்தசாமி. பின்னர் இந்த வழக்குகளில் இருந்து அமித்ஷா விடுதலையானார். அதேபோல் கேரளாவில் தற்போதைய முதல்வர் பினராயி விஜயன் தொடர்புடைய லால்வின் ஊழல் வழக்கை விசாரித்தவரும் டிஜிபி கந்தசாமிதான். முன்னதாக 2007-ல் கோவாவில் பிரிட்டிஷ் இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ததும் கந்தசாமி தலைமையிலான டீம்தான்.
கந்தசாமி நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். 1989 ஐபிஎஸ் ஆனார். திருச்சி, மதுரை, விழுப்புரம் டிஐஜியாக பணியாற்றியவர். இவர் இன்று பணி ஓய்வு பெறுகிறார். இதையொட்டி அவருக்கு இன்று மாலை சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் பிரிவுபசார விழா நடக்கிறது.