தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இன்று திருச்சி வந்தார். காவல்துறையினர் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த அவர், பின்னர் ராமநாதபுரம் புறப்பட்டார். வழியில் திருச்சி அடுத்த மாத்தூர் போலீஸ் நிலையத்திற்கு டிஜிபி திடீரென சென்றார்.
சைலேந்திரபாபு இந்த வழியாக செல்கிறார் என்பதை அறிந்த போலீசார் அங்கு தயார் நிலையில் இருந்தனர். டிஎஸ்பி
செங்குட்டுவன், இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள், காவலர்கள் டிஜிபியை வரவேற்றனர்.
காவல் நிலையத்திற்குள் சென்ற டிஜிபி அங்கு சிறிது நேரம் ஆய்வுபணி மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து அவர்
ராமநாதபுரம் செல்லும் வழியில் நமுணசமுத்திரம் காவல் நிலையத்திற்கும் சென்றார். அங்கு எஸ்.பி. வந்திதா பாண்டே டிஜிபியை வரவேற்றார். அங்கும் ஆய்வு மேற்கொண்ட டிஜிபி அங்கிருந்து திருமயம் வழியாக செல்கிறார். வழியில் திருமயம் காவல் நிலையத்திலும் ஆய்வு மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.