தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் இது தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜல்லிக்கட்டு, கம்பாலா, எருது விடுதல் போன்ற விளையாட்டுகளுக்கு எந்த விதமான தடையும் விதிக்கவில்லை. சமூகவலைதளத்தில் பரவும் தகவல் தவறானது. எந்த விதமான விளையாட்டுகளுக்கும் தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பப்படவில்லை. இதுபோன்ற தவறான தகவலை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags:டிஜிபி எச்சரிக்கை