மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா நடிப்பில் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ள விடாமுயற்சி படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
தலைசிறந்த சஸ்பென்ஸ் திரைப்படமாக விடாமுயற்சி உள்ளது. திறம்பட உருவாக்கப்பட்டுள்ள திரைக்கதை ஒரு சிறந்த சர்வைவல் திரில்லர் படத்தைக் கொடுத்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் பதற்றத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக அஜித்தின் அர்ஜுன் கதாபாத்திரம் மனைவியை தொலைத்துவிட்டு தேடும் போது வரும் ட்விஸ்ட் ஆடியன்ஸை கிளைமாக்ஸ் வரை கட்டிப்போட்டுள்ளது. அஜித்தின் நடிப்புக்கு ஈடு இணையே இல்லை. அனிருத்தின் இசை திரில்லர் படத்தை தூக்கி நிறுத்துகிறது. ஒரு மாயாஜாலாமான புதிய அனுபவமாக உள்ளது இந்த விடாமுயற்சி.
விடாமுயற்சி ஸ்டைலிஷ் திரைக்கதை உடன் கூடிய ஒரு வித்தியாசமான முயற்சி. அஜித் போன்ற மாஸ் ஹீரோவுக்கு ஒரு பில்டப் காட்சிகள் கூட இல்லாவிட்டாலும் படம் விறுவிறுப்பாகவும் பொழுதுபோக்குடனும் நகர்கிறது. இது வழக்கமான மசாலா மாஸ் படம் கிடையாது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என பதிவிட்டிருக்கிறார்.
விடாமுயற்சி நல்ல படம் ஆனால் அஜித்திடம் இருந்து இன்னும் எதிர்பார்த்தேன். பிரேக்டவுன் படத்தின் ரீமேக் தான் ஆனால் அதில் அஜித் – திரிஷாவின் கதை சேர்க்கப்பட்டுள்ளது. சிம்பிளான திரைக்கதை, அனைத்து நடிகர்களும் சூப்பராக நடித்திருக்கிறார்கள். சண்டைக்காட்சிகள் அருமையாக உள்ளது என குறிப்பிட்டிருக்கிறார்.
விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு நிறைய லுக் இருக்கிறது. அவை அனைத்துமே முதல் 30 நிமிடங்களில் வந்துவிடுகிறது. அஜித்தின் நடிப்பு பிரம்மிப்பூட்டுகிறது. அஜித் – திரிஷா ஜோடி அருமை. ஆனால் முதல் பாதியின் முடிவில் சில ட்விஸ்ட்கள் இருக்கிறது என பதிவிட்டுள்ளார். விடாமுயற்சி படத்தின் இரண்டாம் பாதியை விட முதல் பாதி அருமையாக இருந்தது. திரில்லர் படம் தான் ஆனார் மெதுவாக கதை நகர்கிறது. படத்தில் ட்விஸ்ட் அருமையாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. படத்தில் உள்ள ஒரே பிரச்சனை இரண்டாம் பாதி மெதுவாக நகர்வது தான். மற்றபடி நல்ல படம் என குறிப்பிட்டுள்ளார்.