கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பிரபல மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் உட்பட 5 அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதையடுத்து கோவை மாவட்ட சரக டி ஐ ஜி சரவணசுந்தர் தலைமையில் கோவில் வளாகத்தில் அமைக்கபட்டுள்ள பாதுகாப்பு தடுப்புகள்,கண்காணிப்பு கோபுரம் பாதுகாப்பு, சிசிடிவி கேமராகள்,போலீசார் பாதுகாப்பு அறை,கோவில் கோபுரம் பகுதி மற்றும் விஐபிகள் பொதுமக்கள் செல்லும் வழித்தடங்கள் குறித்தும் பக்தர்கள் வரும் வாகனங்கள்
நிற்கும் இடங்கள் பாதுகாப்பு குறித்தும் டி ஐ ஜி ஆய்வு மேற்கொண்டார் பின் டிஐஜி கூறுகையில் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா முன்னிட்டு ஆயிரம் போலீசார் மற்றும் 500 ஊர்க்காவல் படையினர் பணியில் ஈடுபட உள்ளனர் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் பாதுகாப்பு பணி நடைபெற உள்ளது குறிப்பாக பக்தர்கள் சாம தரிசனம் செய்து பாதுகாப்பாக வெளியேறும் வரை போலீசார் பணியில் ஈடுபடுட உள்ளனர் என தெரிவித்தார்,இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆனைமலை துணை கண்காணிப்பாளர் ஶ்ரீ நிதி,ஆய்வாளர் தாமோதரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.