கரூர் அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய 102 ஆம் ஆண்டு மாசித் திருவிழா நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய 102 ஆம் ஆண்டு மாசி மாத திருவிழா நேற்று தொடங்கியது. இந்நிகழ்வில் முக்கிய நிகழ்வாக இன்று நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கரூர் அமராவதி ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், அக்கினிசட்டி உள்ளிட்ட நேர்த்தி கடனை செய்தவாறு முக்கிய வீதியில் வழியாக பக்தர்கள் வலம் வந்த பிறகு ஆலய வாசலில் அமைக்கப்பட்டிருந்த பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செய்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கரூர் நகர காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் அனைவருக்கும் அன்னதானமும் மதியம் மூலவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது. இன்று இரவு சாமியே திருவீதி உலா கரகாட்டத்துடன் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.