கோவை அவினாசி சாலை உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் அருகே பிரசித்திபெற்ற தண்டு மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் ஒருபகுதியாக அக்கினிச்சாட்டு, திருவிளக்கு வழிபாடு, அம்மன் திருவீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள்
நடைபெற்றன. இதனிடையே தீச்சட்டி ஊர்வலம் இன்று நடைபெற்றது. கோனியம்மன் கோவிலில் தொடங்கிய இந்த ஊர்வலத்தில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் பூச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலமாகச் சென்று தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தினர். காலை 6 மணிக்குத் தொடங்கிய இந்த ஊர்வலம், ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், உப்பிலிபாளையம் மேம்பாலம் வழியாகச் சென்று தண்டு மாரியம்மன் கோவிலை அடைந்தது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தீச்சட்டி, ஏந்தி பால்குடம் ஊர்வலம் சென்றனர். தண்டு மாரியம்மன் கோவில் தீச்சட்டி எடுத்து ஊர்வலம் சென்ற பக்தர்கள்.
