Skip to content
Home » பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் கார் மோதி பலி….

பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் கார் மோதி பலி….

  • by Authour

திருப்பூர் மாவட்டம்  தாராபுரத்தில் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா நெருங்கும் நிலையில்  பவானி கூட கரையைச் சேர்ந்த எண்பது பக்தர்கள் பாதயாத்திரை வந்தனர். அவர்கள் இன்று தாராபுரம் புறவழிச் சாலை வழியாக வரப்பாளையம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை வந்த பக்தர்கள் மீது ரெட் டாக்ஸி வாடகை கார் பக்தர்களின் பின்பகுதியில் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஈரோடு பவானி கூட கரையை சேர்ந்த ராமன் (54)  என்பவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பவானி கூட கரையைச் சேர்ந்த வினையன், பொன்னுச்சாமி, சுந்தரம், துரையன், அமுதராஜ், ஆகிய 5,பேர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 5, பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். பக்தர்கள் மீது கார் மோதிய சம்பவம் தாராபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.