சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் தேவர் திருமகனார் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்கிற சிற்றூரில் , 1908-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30-ம் நாள் பிறந்தார்.
1920ம் ஆண்டுகளில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமலில் இருந்த மிகவும் கொடுமையான குற்றப்பரம்பரை என்கிற சட்டத்திற்கு எதிராக முதன் முதலில் போராடி அச்சட்டத்தினை அகற்றியவர் தேவர் பெருமகனார் ஆவார்.
1952-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் அருப்புக்கோட்டை பாராளுமன்ற தொகுதியிலும், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி என பல்வேறு உச்சங்களைத் தொட்டவர் தேவர் பெருமகனார்.
பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்கு பதில் கட்டப்பட்டுள்ள அரங்கத்தை திறந்து வைத்தார். ரூ.1.55 கோடியில் கட்டப்பட்ட இரண்டு மண்டபங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். அக்.30-ம் தேதி பசும்பொன் நினைவிடத்தில் மரியாதை செலுத்த முதலமைச்சர் பசும்பொன் செல்கிறார்.