இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவருர் தேவநாதன் யாதவ். பாஜக ஆதரவாளரான இவர் கடந்த மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளராக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார். இவர் ‘தி மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி லிமிடெட்’ என நிதி நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த நிறுவனத்தில் ரூ.50 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக 140க்கும் மேற்பட்டோர் போலீசில் புகார் அளித்தனர்.
அதைத்தொடர்ந்து இன்று திருச்சி விமானநிலையத்தில் தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து காஜாமலையில் உள்ள அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மேல் விசாரணைக்காக தேவநாதனை சென்னைக்கு அழைத்து சென்றனர். தேவநாதன் win என்ற பெயரில் தொலைக்காட்சி நிறுவனமும் நடத்தி வருகிறார்.