அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அப்போது துணை முதலமைச்சர் பதவி குறித்து உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் உதயநிதி பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:
கே: தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு பிறந்த நாள் செய்தி என்ன? ப: செய்தி எதுவும் இல்லை. வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
கே: தொண்டர்களின் கோரிக்கைக்கு இணங்க துணை முதலமைச்சர் பதவி உங்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறதே….
ப: முதல்வர் முடிவு எடுப்பார்… என்றார்.
இந்த சந்திப்பின் போது அமைச்சர் பி.கே.சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா உடன் இருந்தனர்.