திமுக இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு மாநகரம், கலைஞர் நகர் பகுதி தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பகுதிச் செயலாளர் மணிவேல் தலைமை வகித்தார் கூட்டத்தில் திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஈரோடு
கே.இ. பிரகாஷ் எம்.பி , மாநகரச் செயலாளர் மதிவாணன், தலைமைக் கழக பேச்சாளர் குமரி பிரபாகரன் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன் ,துணை மேயர் திவ்யா தனக்கோடி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பொற்கொடி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் செந்தமிழ்ச்செல்வன், வட்டக் கழகச் செயலாளர்கள் கலியமூர்த்தி, மகாலிங்கம் மற்றும் மாநகர, பகுதி கழக,வட்டக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.