மராட்டிய மாநிலத்தில் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக ஏக்நாத்ஷிண்டே உள்ளார். இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மராட்டிய எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் இன்று தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 9 பேருடன் மராட்டிய கவர்னரை சந்தித்தார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அஜித் பவார் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்பவாருக்கு துணை முதல் மந்திரி பொறுப்பும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 9 பேருக்கு மந்திரி சபையில் இடம் அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்புக்கு சரத் பவாரின் மகள் சுப்ரியே சுலா நியமனம் செய்யப்பட்டதால் 29 எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. அஜித் பவார் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், அஜித் பவார் ஏற்படுத்தியிருக்கும் பூகம்பம் மராட்டிய அரியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.