திருச்சி மாவட்டம் துறையூரில் நாளை கலைஞர் சிலை திறப்பு மற்றும் பெரம்பலூர் எம்பி அலுவலக திறப்பு விழா ஆகியவை நடைபெறுகின்றன. இவ்விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.இவ்விழா தொடர்பான அழைப்பிதழ் வௌியாகியுள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ளும் எம்பி ராசா, அமைச்சர்கள்
செந்தில்பாலாஜி, சிவசங்கர், மகேஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் அழைப்பிதழிலில் இடம் பெற்றுள்ளன. முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இனிஷியலுடன் இடம் பெற்றுள்ள நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் பெயருக்கு முன்னாள் இனிஷியல் ‘வி’ இடம் பெறவில்லை. தற்போது இந்த அழைப்பிதழ் வைரலாகி வருகிறது.