Skip to content

கோவையில் இன்று துணை முதல்வர் விழா.. அமைச்சர் செந்தில் பாலாஜி பிராண்ட ஏற்பாடு

  • by Authour

கோவையில் இன்று மாலை 4 மணிக்கு ஆர்எஸ் புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்டு 22,526 பயனாளிகளுக்கு ரூபாய் 215.31 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி,ரூபாய் 100.40 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். விழாவிற்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகிக்கிறார். முன்னதாக கோவை வரும் துணை முதல்வருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

error: Content is protected !!