நாளை காலை 11 மணியளவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு வருகை தருகிறார் . வனத்துறை நிகழ்ச்சி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்கிறார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார் . 38 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற பணிகள் நாளை திறந்து வைக்கப்படுகின்றன. 66 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட உள்ளது. முதல்வரும் துணை முதல்வரும் அரசுத் திட்டங்களை தொடர்ந்து கண்காணித்து மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர் என்று மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் தெரிவித்தார்.
துணை முதல்வர் உதயநிதி கோவை வருகை…. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..
- by Authour
