தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கினங்க சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கலாச்சார பாரம்பரிய நகரமான தரங்கம்பாடியில், பல்வேறு சுற்றுலா வசதிகள் ரூ.3 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். டேனிஷ் வர்த்தக நிலையமாக விளங்கிய தரங்கம்பாடி ஒரு கடற்கரை நகரமாகும். இங்கு அமைந்துள்ள டேனிஷ்கோட்டை 1620 ம் ஆண்டு டேனிஷ் கட்டடக்கலை அம்சங்களைக் கொண்டு கட்டப்பட்டது. டேனிஷ்கலாச்சார பாரம்பரிய நகரமான தரங்கம்பாடியில் டேனிஷ்கோட்டை வளாகம் மற்றும் பழமையான கட்டடங்களின் மேம்பாடு, அடிப்படை வசதிகள், நடைபாதை மற்றும் மிதிவண்டி பாதை, கடற்கரை பகுதி மேம்பாடு, வாகன நிறுத்துமிடம், வழிகாட்டிப் பலகைகள் போன்ற சுற்றுலா அடிப்படை வசதிகள் ரூ.3 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் .ராமச்சந்திரன் அறிவித்துள்ளார் .இந்த தகவலை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.