Skip to content
Home » டெங்குவை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை……அரியலூர் அமைச்சர் மா.சு. பேட்டி

டெங்குவை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை……அரியலூர் அமைச்சர் மா.சு. பேட்டி

சீனா புல்டாக் நூடுல்ஸ் மீதான சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்க ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் வந்த பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்…

அரியலூர் மாவட்டம் கோட்டியால் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரியலூர், குன்னம் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் மூன்று கோடியே 35 லட்சம் மதிப்பிலான ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலைய கட்டிடங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் திறந்து வைத்தார். பின்னர் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பல்வேறு சேவை துறைகளை ஒருங்கிணைத்து, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் ஆலோசனை செய்துள்ளோம். உலகத்தின் 80 சதவீத நாடுகளில் டெங்கு பாதிப்பு அதிகரித்தது. ஆனால் தமிழ்நாடு அரசின் தீவிர முயற்சி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட மூன்று துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, டெங்கு பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அதேபோல் இவ்வாண்டும் டெங்கு பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புல்டாக் என்ற நூடுல்ஸை சாப்பிட்ட சிறுமி திருச்சியில் உயிரிழந்திருப்பது மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது,

திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் சோதனை செய்யப்பட்டது. இதில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காலாவதியான புல்டாக் உணவு 800 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த உணவு பொருட்கள் ஆய்வகத்திற்கு அனுப்பி, அதன் தரம் குறித்து ஆய்வு செய்ய அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் வந்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்‌

தமிழகத்தில் முதலமைச்சராக கலைஞர் இருந்த போது தான், மருத்துவ காப்பீடு முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை ஒருங்கிணைத்து தற்போது மத்திய அரசு ஆயிஸ்மான் பாரத் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதில் மாநில அரசு நான்கு லட்சமும் மத்திய அரசு ஒரு லட்சம் என ஐந்து லட்சம் மதிப்பிலான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் இத்திட்டம் உள்ளது.

அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கி ஒன்றரை வருடங்கள் ஆகியுள்ள நிலையில், எம்ஆர்ஐ ஸ்கேன் சிடி ஸ்கேன் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!