Skip to content
Home » திருச்சி கலெக்டர் அலுவலத்தில் மா., கம்யூ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்…

திருச்சி கலெக்டர் அலுவலத்தில் மா., கம்யூ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்…

திருச்சி மாநகராட்சி 25 ஆவது வார்டுக்குட்பட்ட உய்யகொண்டான் பகுதியில் உள்ள ஆதிநகர் ,சாந்த ஷீலா நகர்களில் 40 வருடத்திற்கு மேல் 1000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வரும் வீடுகளையும், முன்னாள் மாவட்ட ஆட்சியர் சாந்தஷீலா வால் பட்டா வழங்கிய பகுதிகளையும் நகர்ப்புற விரிவாக்கம் என்ற பெயரில் அங்குள்ள குடியிருப்புகளையும், வீடுகளையும் இடிக்க முயற்சிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பட்டா வழங்கிய பகுதியில் உள்ள வீடுகளையும், ஆதிநகர் பகுதி மக்கள் குடியிருப்பு களையும் இடிக்க முயற்சிப்பதை கைவிட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதிக்குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆறுமுகம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மேற்கு பகுதி செயலாளர் ரபீக் அஹமது, மாவட்டக் குழு உறுப்பினர்கள் அன்வர் உசேன், சீனிவாசன் ஆகியோர் பேசினர். இதில் பகுதிக்குழு உறுப்பினர்கள் இருதயராஜ், நடராஜன், செல்வம், விஜயலட்சுமி, ஹரிபாஸ்கர், சந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பகுதிக்குழு உறுப்பினர் பழனியப்பன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *