பாஜக மோடி அரசின் பட்ஜெட்டை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட தலைநகர் அரியலூரில் அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக AITUC மாவட்டப் பொதுச் செயலாளர் த.தண்டபாணி, தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ரெ.மகேந்திரன், சிஐடியு மாவட்ட செயலாளர் P. துரைசாமி, INTUC மாவட்ட தலைவர் D. விஜயகுமார், HMS மாவட்ட செயலாளர் S. இராமசாமி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வரும் நிதியாண்டிற்கு வரி மற்றும் இதர வகைகளில் 31.5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் மதிப்பீட்டில், 47 லட்சம் கோடி செலவு மதிப்பிடப்பட்டு 15.5 லட்சம் கோடி பற்றாக்குறை என மதிப்பிடப்பட்டுள்ள பட்ஜெட்டை பாஜக மோடி அரசு தாக்கல் செய்துள்ளது. இதில் வெறும் 3.5 கோடி பேர் மட்டும் பயன்பெறும் 12 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் வரை வரி சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதர பெரும்பான்மையான ஏழை எளிய சுமார் 130 கோடி சாமான்ய மக்களுக்கு வாழ்க்கையை மேம்படுத்த அறிவிப்பு இல்லாத பட்ஜெட். பெரு முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வரி சலுகை மோடி ஆட்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல விபரங்களை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் AITUC R. தனசிங், K. சிவகுமார்,G.ஆறுமுகம், சு.கவர்னர், S.ஆனந்தன், து.பாண்டியன், ரெ.நல்லுசாமி, மா. நல்லம்மாள், மா. காமாட்சி, R. சின்னதுரை, வெ.பன்னீர்செல்வம், T.ஜீவா, சங்கர், கு. வனிதா, முருகேசன், பானுமதி, சாந்தி, R.மருதமுத்து, P.ரேவதி, S.பிச்சைப்பிள்ளை, ரா. பானுமதி, ரா. செல்வராசு, து.காசிநாதன், அண்ணாதுரை, ஆட்டோ K.அறிவொளி, சிஐடியு R.சிற்றம்பலம், க. கிருஷ்ணன், M.சந்தானம், அழகுதுரை, அருண்பாண்டியன், தொமுச P. V.அன்பழகன், T.சேகர், டாஸ்மாக் M.அன்பழகன், M. A.அந்தோணிசாமி, INTUC சௌந்தர்ராஜன், A.கலைவாணன், வைரமுத்து, P.மருதை, HMS மா. மு.சிவக்குமார், R.நாகராஜன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூரில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து… அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…
- by Authour