தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடு, சுகாதார சீர்கேடு, வரி உயர்வு போன்ற முறைகேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர், அமைப்பு செயலாளர் செம்மலை கண்டன உரையாற்றினார். அமைப்பு செயலாளர் காந்தி, மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர், மாநகர செயலாளர் என்.எஸ்.சரவணன் ஆகியோர் முன்னிலை வைத்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி நிர்வாகம் சொத்துவரி உட்பட பல்வேறு வழிகளை கடுமையாக உயர்த்தி உள்ளது. இதனால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்த வரி
உயர்வு கண்டிப்பது, தஞ்சாவூர் அருளானந்தம்மாள் நகரில் பள்ளிக்கூடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை மாநகராட்சி மேயர் சுய லாபத்தோடு மனை பிரிவுகளாக மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்தும், மேயர் மனைவி பெயரில் மனை பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வலியுறுத்துவது, மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் நிறுவனம் அப்பணியை முறையாக செய்யாமல் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்