திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, மேல்மா சிப்காட் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த 7, விவசாயிகள் மீது தமிழக அரசு பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளது. இதற்கு விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே கடும் எதிர்ப்புக் எழுந்தது. இதனிடையே போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட இவ்வழக்குகளை ரத்து செய்ய கோரி இன்று நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அனைத்து விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர், அப்போது போராடும் விவசாயிகள் மீது பொய் வழக்கு போடும் காவல் துறையை கண்டித்தும், விவசாயின் மீது போடப்பட்ட வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற வலியுறுத்தியும், முழக்கங்கள் எழுப்பப்பட்டன.