கரூர் பேருந்து நிலையத்தில் ஒரு பகுதி சிதிலமடைந்ததாக கூறி, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இடித்து அகற்றினர். இதனால் பேருந்து நிலையத்தில் நிழல் குடை, பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் மற்றும் புற காவல் நிலையம் எதுவும் இல்லாததால், பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்படுகி்றதுழ. எனவே பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் எனக் கூறி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. மேற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் 70-க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.