Skip to content
Home » போபால் விஷ கழிவுகளை எரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்….பெட்ரோல் ஊற்றிய 2 பேர் மீது தீ… பயங்கரம்…

போபால் விஷ கழிவுகளை எரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்….பெட்ரோல் ஊற்றிய 2 பேர் மீது தீ… பயங்கரம்…

1984-ம் ஆண்டு போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பூச்சிக் கொல்லி உற்பத்தி ஆலையில் மிக பயங்கரமான விஷ வாயு கசிவு ஏற்பட்டது. உலகையே உறைய வைத்த இந்த கொடூரமான விஷ வாயு கசிவு விபத்தில் சுமார் 6,000 பேர் உயிரிழந்தனர்; லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்பு இன்றும் தொடருகிறது.

இந்த பின்னணியில் நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றி 40 ஆண்டுகளுக்குப் பின்னர் போபால் யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து விஷ கழிவுகள் அகற்றப்பட்டன. இப்படி அகற்றப்பட்ட விஷ கழிவுகளை பீதம்பூர் என்ற இடத்தில் எரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் பீதம்பூர் பகுதி மக்களோ விஷ கழிவுகளை தங்களது பகுதியில் எரிக்கவே கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராடங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களின் ஒரு பகுதியாக நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் 2 பேர் தங்களது உடலில் பெட்ரோல் ஊற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது திடீரென பெட்ரோல் ஊற்றிக் கொண்ட இருவரது உடலிலும் பயங்கரமாக தீ பிடித்து எரிந்தது. இதனால் அனைவரும் அலறி அடித்து ஓடினர். பின்னர் தீக்காயங்களுடன் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை  செய்து வருகின்றனர்.