மத்திய அரசின் சுற்றுலா துறை கோயில்களின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய சுற்றுலா அமைச்சகம் சார்பில் தேர்ந்தெடுக்க கோயில்களில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் புனித யாத்திரை, புத்துயிர் மற்றும் ஆன்மிகம், பாரம்பரியத்தை மேம்படுத்துதல் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருபகவான் கோயில், தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில், திங்களூர் கைலாசநாதர் கோயில், திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில்.
திருவிடைமருதூர் சூரியனார் கோயில், மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோயில், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில், சீர்காழி வைத்தியநாத சுவாமி கோயில் ஆகிய 8 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்காக ரூ.45 கோடியே 34 லட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிதி அனுமதிக்காக மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் திட்டம் செயல்படுத்தப்படும்.