திருச்சி மக்களவை தொகுதி்யில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ 4 சுற்றுகள் ஓட்டுகள் எண்ணப்பட்ட நி்லையில் 40 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருந்தார். தொடர்ந்து அவர் அதிக வாக்குகள் பெற்ற நிலையில் இருந்தார். எனவே அவரது வெற்றி உறுதியாக தெரிகிறது என கணிக்கப்படுகிறது. இதுபோல டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக அமோகமாக வெற்றிமுகத்தில் உள்ளது. மயிலாடுதுறை காங் வேட்பாளர் சுதா, நாகை யில் இந்திய கம்யூ வேட்பாளர் செல்வராஜ், தஞ்சையில் திமுக வேட்பாளர் முரசொலி, கரூர் காங். வேட்பாளர் ஜோதிமணி பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண்நேரு, ஆகியோரும் முன்னணியில் உள்ளனர்.