தஞ்சாவூர் மாவட்டம் , பாபநாசம் சுற்றி உள்ள பகுதிகளான பட்டுக்குடி, வீரமாங்குடி மணலூர் உட்பட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கோடை சாகுபடியான மிளகாய், கத்தரிக்காய், வாழை, உளுந்து உட்பட பல்வேறு பயிர்களை விவசாயிகள் பயிர்செய்து வருகின்றனர். இந்நிலையில் பயிர் செய்யப்பட்ட விவசாய தோட்டங்களில் போதிய ஆள்பற்றாக்குறையினால் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் கிராமப் பகுதிகளில் வசிப்பவர்கள் 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்வதால்
மிளகாய், கத்திரிக்காய் போன்ற காய்கள் செடியிலேயே பழுத்து அழிந்து விடும் நிலை ஏற்படுவதாகவும், மும்முறை மின்சாரம் சரிவர கிடைக்காததனாலும் விவசாயம் செய்வதில் கேள்விக்குறியாக அமைந்துள்ளதாகவும், டெல்டா மாவட்டங்கள் முழுவதும் இதே நிலை நீடித்து வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து விவசாய நிலங்களை பார்வையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.