டில்லியில் இன்று காலை 11 மணி அளவில் ஒரு கேங்ஸ்டர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது பெயர் நாதிர்ஷா. ஒரு ஜிம் அருகே நின்று கொண்டிருந்த கேங்ஸ்டரை மர்ம நபர்கள் சுட்டு கொன்றனர். இன்னொரு கேங்ஸ்டர் கும்பல் தான் இவரை கொலை செய்திருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பான கண்காணிப்பு காமிரா காட்சிகளும் போலீசாருக்க கிடைத்துள்ளது. அதன் மூலம் போலீசார் குற்றவாளிகளை தேடுகிறார்கள்.