புது டில்லியில் மாவட்ட நீதித் துறைக்கான இரண்டு நாள் தேசிய மாநாடு இன்று தொடங்கியது. பிரதமர் மோடி இதனை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், வழக்கறிஞர் சங்க தலைவர் கபில் சிபல் மற்றும் பல நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்றம் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதை குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட சிறப்பு தபால் தலை, சிறப்பு நாணயம் ஆகியவற்றை பிரதமர் மோடி வெளியிட்டார்.