சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்த டெலிவரி ஊழியர் சதீஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை டெலிவரி செய்யவந்த போது இச்செயலில் ஈடுபட்டுள்ளார். அப்பெண் கூச்சலிட்டதும் தப்பி சென்றுள்ளார். போலீசாரிடம் பெண் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுத்தனர்.
