Skip to content
Home » டில்லி குடியரசு தின அணிவகுப்பு… தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு 3வது பரிசு…

டில்லி குடியரசு தின அணிவகுப்பு… தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு 3வது பரிசு…

டெல்லியில் ஆண்டுதோறும் ஜனவரி 26 ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும்.

இந்த ஆண்டுக்கான குடியரசு தின விழா அணி வகுப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன. அதில் பங்கேற்ற தமிழ்நாடு அரசின் ஊர்தியில் குடவோலை முறையின் சிறப்பை விளக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பெண்களின் பறை இசையோடு கடந்து சென்ற இந்த ஊர்தி குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த  ஊர்திக்கு நடுவர்கள் குழு 3 வது பரிசை அறிவித்துள்ளனர்.

குடிசைத் தொழிலில் பெண்களின் முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஓடிசாவின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.  எல்லைப்பகுதி சுற்றுலாவை பிரதிபலித்த குஜராத்தின் அலங்கார ஊர்திக்கு 2வது பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மக்கள் தேர்வின் அடிப்படையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், குஜராத்திற்கு முதலிடமும், உத்தரப் பிரதேசத்திற்கு 2வது மற்றும் ஆந்திராவிற்கு 3 வது இடங்களும் கிடைத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!