Skip to content
Home » இதயத்தின் வேலை என்ன?…. மாணவன் அளித்த பதிலுக்கு 10 லட்சம் லைக்

இதயத்தின் வேலை என்ன?…. மாணவன் அளித்த பதிலுக்கு 10 லட்சம் லைக்

  • by Senthil

உயிரியல் பாடத்தில் இதயம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு   மாணவர் அளித்த பதில்  மாணவர்கள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் மத்தியில்  பெரும் வரவேற்பை மட்டுமல்ல, சிரிப்பையும் வரவழைத்து உள்ளது.  சமூக வலைத்தளங்களில் லைக்கும் அள்ளியது. அப்படி என்னதான் கேள்வி கேட்கப்பட்டது. மாணவர் என்னதான் பதில் எழுதினார் என்று அறியஅனைவரின் மனமும் துடிக்கத்தான் செய்யும்

இதோ அந்த கேள்வியையும், அதற்கு அவர் படம் வரைந்து, பாகங்கள் குறித்து அளித்த விளக்கமான பதிலையும் பார்க்கலாம்.

இதயத்தின் படத்தை வரைந்து அதன் பாகங்களை குறித்து, அதன் செயல்கள் குறித்து  விளக்கும்படி  கேட்கப்பட்டிருந்தது.  அந்த   மாணவர் இதயத்தின் படத்தை சரியாகத்தான் வரைந்து இருந்தார்.  பாகங்கள் குறித்த விதமும், அதன் வேலைகள் குறித்து அவர் கூறியதும்  தான் அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.

அவர் இதயத்தின் உள்பாகங்களான ஏட்ரியம் மற்றும் வெண்ட்ரிக்கிள்கள் ஆகியவற்றை பற்றி குறிப்பிடுவதற்கு பதிலாக, பிரியா, ரூபா, பூஜா, நமீதா மற்றும் ஹரிதா என  தான் விரும்பும்  பெண் தோழிகளின்  பெயர்களை குறிப்பிட்டு இருந்தார்.

பிரியா என்னோடு இன்டாவில் சாட்டிங் செய்யும் தோழி,  ரூபா அழகானவர்… அவர் என்னுடன் ஸ்நாப்சாட்டில் உரையாடுவார். நமீதா நீண்ட தலைமுடி பெரிய கண்களை உடையவர்,  பூஜா என்னுடைய முன்னாள் காதலி என்றும் அதில் விளக்கம் அளித்து இருந்தார். ஹரிதா என்னுடைய வகுப்பு தோழி என்றும் கூறியிருந்தார்.

சமூகவலைதளங்களில் வெளியான இந்த படத்தை 6.43 கோடி பேர் பார்வையிட்டு உள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். இந்த பதிலை பார்த்த ஆசிரியை அதிர்ச்சி அடைந்தார். அவர் 10க்கு 0 மார்க் போட்டதுடன் அந்த மாணவனின் பெற்றோரை  வரவழைத்து அந்த  வினாத்தாளை அவரது பெற்றோரிடம் கொடுத்து பார்க்கும்படி கூறினர்.  இதனால் அந்த மாணவன் நொந்து போனான்.

ஆனால் அவனுக்கு யாரும் மோசமான கமென்ட் கொடுக்கவில்லை. ஆனால்  அவனுடைய தோழிகளுக்கு என்ன ஆகப்போகிறதோ என்றும்,  இதயத்தில் 4 அறைகள் இருப்பதை தெரிந்து வைத்திருக்கிறான் , புத்திசாலி என்றும் கமென்ட் செய்துள்ளனர். ஆனால் அந்த மாணவன் பெயா் உள்ளிட்ட எந்த குறிப்புகளையும் வெளியிடவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!