Skip to content

டில்லியில் ரூ.150 கோடியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் திறப்பு

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ளது. தலைநகர் டில்லியில் புதிய அலுவலகத்தை பிரமாண்டமாக கட்ட அந்த அமைப்பு முடிவு செய்தது. இதற்காக  ரூ. 150 கோடியில் டில்லியில் கேசவ் கஞ்ச் என்ற பெயரில் புதிய அலுவலகத்தை கட்டியுள்ளது . 5 லட்சம் சதுரஅடியில் பிரமாண்டமாக 12 மாடிகளுடன் இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

ஒரு பகுதியில்  நிர்வாக அலுவலகம்  நூலகம் அமைந்துள்ளன.  இன்னொரு   பகுதியில்  பத்திரிகையாளர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவதுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.  அர்ச்சனா டவர் என்ற  பகுதியில்  நிர்வாகத்தில் உள்ள ஊழியர்கள் தங்க 80 அறைகள் உள்ளன. இது தவிர 5 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை கீழ் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

80 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடும் வகையில்  டைனிங் ஹாலும் உள்ளது. முற்றிலும் சூரிய ஒளி மின்சாரத்தில் இந்த கட்டடம் இயங்கும். கட்டடத்தின் அனைத்து பகுதிகளிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  இந்த கட்டடத்தை கட்ட  சுமார் 75 ஆயிரம் பேர் நன்கொடை அளித்துள்ளனர்.

error: Content is protected !!