குடியரசு தின விழாவிற்கான தமிழ்நாட்டின் அலங்கார அணிவகுப்பு ஊர்தியை ஒன்றிய அரசு நிராகரித்ததாக வெளியான செய்தி வதந்தி என மாநில அரசின் தகவல் சரிபார்ப்பக்கம் விளக்கம் அளித்துள்ளது.
டில்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் உயர்த்தி பிடிக்கும் அலங்கார அணிவகுப்பு ஊர்திக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கவில்லை என எக்ஸ் தளத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அத்துடன் தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.
அதன்படி தமிழ்நாட்டு அணிவகுப்பு ஊர்தி 2025ம் ஆண்டுக்கு பதிலாக 2026ம் ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும். இதை சுட்டிக்காட்டியுள்ள தகவல் சரிபார்ப்பகம் தமிழ்நாடு அரசு அணிவகுப்பு ஊர்திக்கும் அனுமதி வழங்கப்பட வில்லை என்பது வதந்தி என விளக்கம் அளித்துள்ளது. மறு சுழற்சி முறையில் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதால் ஜனவரியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழ்நாடு அரசு ஊர்தி பங்கேற்க இயலாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.