Skip to content
Home » குடும்ப சண்டையில் கணவனின் மர்ம உறுப்பை அறுத்த மனைவியை தேடும் போலீஸ்..

குடும்ப சண்டையில் கணவனின் மர்ம உறுப்பை அறுத்த மனைவியை தேடும் போலீஸ்..

வடக்கு டில்லியின் ரூப் நகர் பகுதியை சேர்ந்த தம்பதிக்கிடையே நேற்று திடீரென்று குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த அந்த பெண், தனது கணவரின் மர்ம உறுப்பை கத்தியால் அறுத்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த கணவர், அங்குள்ள சப்தர் ஜங் ம்ருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில் படுகாயம் அடைந்தவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உயிருக்கு ஆபத்தில்லை. அவர் பேசும் நிலை வந்ததும் நடந்த சம்பவம் குறித்து உண்மை நிலை தெரியவரும். மேலும் இந்த சம்பவத்திற்கு பின்னர் மனைவி தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!