டில்லி கிருஷ்ணன் விஹார் பகுதியில் உள்ள கஞ்சவாலா தெருவில் வசிப்பவர் வீட்டிலிருந்து கடந்த ஜூலை 6-ஆம் தேதி 1 வயது ஆண் குழந்தை காணாமல்போனது. புகாரின் பேரில் சுல்தான்புரி போலீஸார் விசாரணை நடத்தி அதேபகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி ரூ.3.30 லட்சத்துக்கு குழந்தையை வாங்கிய உத்தர பிரதேசம் மதுரா மாவட்டத்தில் உள்ள ஒரு தம்பதியரை போலீஸார் கைது செய்தனர். குழந்தையைப் பத்திரமாக மீட்டனர். இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட மற்றொரு பெண்கைது செய்யப்பட்டார். இந்த குழந்தை கடத்தலில் 4 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.