ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு லுஃப்தான்சா ஏர்லைன்ஸுக்கு
சொந்தமான விமானம் இன்று சென்று கொண்டிருந்தது.
இந்த விமானத்தில் பயணித்த கணவன், மனைவி நடுவானில் திடீரென்று சண்டையிட்டுக் கொண்டதால்
பரபரப்பான சூழல் நிலவியது.
விமானமே குலுங்கும் அளவுக்கு கணவன், மனைவி சண்டை உக்கிரமடைந்தது. இதனால் பயந்து போன பைலட் டில்லி விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரையிறக்கினார். பின்னர் கணவனை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகு சிறிது நேரம் தாமதமாக விமானம் பாங்காங் புறப்பட்டு சென்றது.
முன்னதாக விமானத்தை பாகிஸ்தானில் தரையிறக்க பைலட் அனுமதி கோரினார். அங்கு தரையிறக்க அனுமதி கிடைக்காததால் விமானத்தை டில்லியில் தைரயிறக்கினார் பைலட்.
இதுகுறித்து டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர்
செய்தியாளர்களிடம் கூறுகையில், “கணவன், மனைவியின் சண்டைக்கான காரணம் தெரியவில்லை.
ஆனால், அவர்கள் சண்டையிட்டதால் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.” என்று தெரிவித்தார்.