டில்லி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., அமனாதுல்லா கான். இவர் டில்லி வக்பு வாரிய நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாக புகார் எழுந்தது.இதனை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு இவரது வீடு, அலுவலகத்தில் ரெய்டு நடைபெற்றது. இந்நிலையில் பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் நேற்று அமானதுல்லா கான் ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் நடத்திய விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்டார்.