டில்லியில் 2வது முறையாக ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. 3வது முறையும் ஆட்சியை பிடிக்க கெஜ்ரிவால் இப்போதே தேர்தல் பணிகளில் இறங்கி விட்டார். அங்கு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவும் ஆட்சியை பிடிக்க வரிந்து கட்டுகிறது. டில்லி யூனியன் பிரதேசத்தில் 18 வயது நிரம்பிய பெண்கள் அனைவருக்கும் மாதம் 2,100 வழங்கப்படும் என்று கெஜ்ரிவால் இன்று அறிவித்தார். நாளை முதல் இதற்கான கணக்கெடுப்பு பணி தொடங்கும். புதிய அரசு அமைந்ததும் பெண்களின் வங்கி கணக்குகளுக்கு ரூ.2,100 மாதந்தோறும் வழங்கப்படும் என கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.
